/* */

அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.81 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, ரூ.2.81 கோடியை பக்தர்கள் வழங்கி உள்ளனர்

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோவிலில்  உண்டியல் காணிக்கை ரூ.2.81 கோடி
X

காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோவில்களில் 50-க்கும் மேற்பட்ட உண்டியல் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும்.

ஆனால், கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை. இதனால், தை மற்றும் மாசி மாதத்தில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட உண்டியல் காணிக்கை, அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று (14-ம் தேதி) எண்ணப்பட்டது.

கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

அதன்படி, அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கோவிலில் இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

இதில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750-ம், 405 கிராம் தங்கமும், 2 கிலோ 385 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.

Updated On: 15 March 2023 1:19 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...