/* */

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மேல்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன். இவரது நண்பர்கள் பாலாஜி, கார்த்திக். இதில் பாலாஜி என்பவர் மேல்நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் 3 பேரும் சேர்ந்து 7 வயது மதிக்கத்தக்க 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கோழி இறைச்சி கடையில் வைத்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த 3 பேர்களில் சமீபத்தில் மணிபாலன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த பாலாஜி (வயது 36) மற்றும் கார்த்திக் (32) ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.

Updated On: 19 July 2022 1:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்