/* */

தேர்வு நெருங்குவதால் செல்போன்களை தவிர்க்க வேண்டும்: கலெக்டர் அட்வைஸ்

தேர்வு நெருங்குவதால் செல்போன்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தேர்வு நெருங்குவதால் செல்போன்களை தவிர்க்க வேண்டும்: கலெக்டர் அட்வைஸ்
X

திருவண்ணாமலையில் நான் முதல்வன், உலகை வெல்லும் இளைய தமிழகம்' நிகழ்ச்சி நடந்தது.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்- அமைச்சரால் 'நான் முதல்வன் உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்ச்சி திருவண்ணாமலை நகராட்சி மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதில் கலெக்டர் முருகேஷ் பள்ளி மாணவிகளுடன் பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல் அமைச்சர் 'நான் முதல்வன், உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் நோக்கம் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது எதிர்காலத்தில் தாங்கள் அடைய வேண்டிய லட்சியம் குறித்து முன்னதாகவே திட்டமிட்டு, அதற்கு உகந்த பயிற்சி வகுப்புகளை பெற்று தங்களுடைய லட்சியத்தை எய்தி தாங்கள் எடுத்துக்கொண்ட துறைகளில் முதன்மையானவர்களாக திகழ வேண்டும்.

பள்ளி மாணவர்களாகிய நீங்கள் இன்னும் சில நாட்களில் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள உள்ளீர்கள். பொது தேர்வுக்கு இருக்கக்கூடிய இந்த இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி செயலிகளை உபயோகித்து நேரத்தை வீணாக்குவது மற்றும் குடும்ப பொருளாதார சூழ்நிலையை எண்ணி கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து தங்களுடைய பாடத்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் ஆரோகியசாமி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன், தேவஆசிர்வாதம், பள்ளி துணை ஆய்வாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 March 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்