/* */

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்

HIGHLIGHTS

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கனகராஜ் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பைக்கில் கார்ணாம் பூண்டி கிராமத்தில் இருந்து களஸ்தம்பாடி கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

கழிக்குளம் கிராமத்தில் உள்ள ஏரிகரை பகுதியில் அருகே வரும்போது சாலையின் நடுவே பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி இருந்தனர். இதனை கவனிக்காத கனகராஜ் அதில் நிலை தடுமாறி பாலம் கட்டும் பள்ளத்தில் விழுந்தார். கனகராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்த பள்ளத்தில் விழுந்து கிடந்த கனகராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கனகராஜன் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 24 July 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!