/* */

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம்

விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிலுவை தொகையை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம்
X

கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அலுவலக முகப்பில் உள்ள பெயர் பலகையில் கரும்பு விவசாயிகள் துண்டு பிரசுரங்களை ஒட்டினர்  

விழுப்புரம் மாவட்டம் பாலப்பாடி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, கனியாம்பூண்டி, வேடநத்தம், மங்கலம், வேட்டவலம், கொளத்தூர், சோமாசிபாடி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் கரும்புகளை இந்த சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவை தொகை ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. கரும்பு அறுவடை இல்லாத நிலையில் ஆலையும் இயங்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் ஆலை இயங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த கரும்பு விவசாயிகள் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் ஆலை அரவையை தொடங்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர். ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் ஆலையை திறக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீழ்பென்னாத்தூர் பகுதி கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்து நிறுத்துவோம் என அறிவித்துள்ளனர். மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை மண்டல அலுவலக முகப்பில் உள்ள பெயர் பலகையில் கரும்பு விவசாயிகள் துண்டு பிரசுரங்களை ஒட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Updated On: 22 July 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்