/* */

மேக்களூர்: தங்க கருட வாகனத்தில் வீதிஉலா வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள்

மேக்களூர் நவநீதகோபால கிருஷ்ணசாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மேக்களூர்: தங்க கருட வாகனத்தில் வீதிஉலா வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள்
X

தங்க கருட வாகனத்தில் மாட வீதி உலா வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள்

கீழ்பெண்ணாத்தூர் அருகில் உள்ள மேக்களூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நவநீத கோபாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலை 6 மணியளவில் உற்சவர் வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி நாதஸ்வரம், மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் வரதா.. கோவிந்தா.. ரெங்கா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை 3 மணியளவில் விசேஷ திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இந்திர விமானத்தில் வரதராஜபெருமாள் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் இசைக்க வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருடசேவையையொட்டி கோவில் வளாகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Updated On: 16 May 2022 1:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது