/* */

கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Today Strike News -செய்யாற்றில் இருந்து சேத்துப்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

Today Strike News | Strike News
X

சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.

Today Strike News -திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களின் வசதிக்காக ஆரணி, சேத்துப்பட்டு, காஞ்சிபுரம், ஆற்காடு உள்ளிட்ட பல வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து சேத்துப்பட்டு வழியாக போளூருக்கு இயக்கப்பட்ட தடம் எண். 240 அரசுப் பேருந்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயணித்தனா்.

திருவோத்தூா் ஆற்றுப் பாலத்தில் இந்தப் பேருந்து சென்றபோது, பேருந்தை இயக்க முடியாமல் அதன் ஓட்டுநா் நிறுத்திவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த மாணவா்கள் செய்யாறு - சேத்துப்பட்டு வழித் தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஆற்றுப் பாலத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான செய்யாறு, அனக்காவூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, சேத்துப்பட்டு வழித் தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துக் கழகத்திடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்தனா்.

இதை ஏற்று மாணவா்கள் மறியலைக் கைவிட்டு வந்த பேருந்திலேயே பயணித்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 Sep 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு