/* */

செய்யாறு அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல்

செய்யாறு அருகே தூசி கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

செய்யாறு அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல்
X

தூசி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்

தூசி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகள், சிறு மளிகைக்கடைகளில் குட்கா பாக்குகள், ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து திருவண்ணமாலை எஸ்பி பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தூசி அருகே அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள சேர்மராஜ் என்பவர் வீட்டிற்கு வந்த காரில் இருந்து ஆட்டோவில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பாக்கு பாக்கெட்டுகள், ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் இறக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் அவற்றை கார், ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சேர்மராஜ், அவரிடம் வேலை பார்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த தமீம்அன்சாரி (வயது 24), சலீம் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Aug 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  6. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்