/* */

இந்தியா கூட்டணி வென்றால் பெட்ரோல், எரிவாயு விலை குறையும் - கம்பன் பேச்சு

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்படும் என மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன் கூறினார்

HIGHLIGHTS

இந்தியா கூட்டணி வென்றால் பெட்ரோல், எரிவாயு விலை குறையும் - கம்பன் பேச்சு
X

திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எ.வ.வே. கம்பன்

ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தன், திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து மாநில மருத்துவர் அணி துணை தலைவரும், போளூர் தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக போளூர் தொகுதியில் உள்ள கிராமங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

தீவிர பரப்புரைக்கு வந்த கம்பனை மலர் மாலை அணிவித்தும், மேளதாளம் முழங்க கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பாளித்தனர். தொடர்ந்து பிரச்சாரக் கூட்டத்தில் கம்பன் பேசியதாவது;

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்படுத்த முடியாமல் இருந்ததாகவும், திமுக ஆட்சி வந்த உடன் தமிழக முதல்வர் பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளார் .தற்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் மதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் லிட்டர் ரூ 75க்கும், டீசல் லிட்டர் ரூ 65க்கும், கேஸ் சிலிண்டர் ரூபாய் 500க்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதேபோன்று பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக உயர்கல்வி படிக்கும் பெண் பெண்களுக்கு உதவி வழங்குவது போன்று மாணவர்களுக்கும் வழங்கப்படும் என கம்பன் தெரிவித்தார்.

தொடர்ந்து களம்பூர், கேளூர், ஆத்துவம்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கம்பன் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோர் கொண்டு வந்தனர். இவர்கள் கொண்டு வந்ததற்காகவே அந்த திட்டத்தை மோடி அவர்கள் ரத்து செய்துள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக மோடி கூறினார் .அதையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒரு இளைஞர்கள் கூட கிராமப்புறங்களில் இருந்து வேலைக்கு செல்லவில்லை. ஆகவே மோடி சொல்வதையோ எடப்பாடி சொல்வதையோ யாரும் கருத்தில் கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதை செய்வார் செய்வதை சொல்வார் என எடுத்துரைத்து திமுக வேட்பாளர் தரணி வேந்தனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என கம்பன் பேசினார்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதி

தொடர்ந்து திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக தண்டராம்பட்டு ஊராட்சியில் பவித்திரம், வெள்ளூர், ஆண்டா பட்டு, நடுப்பட்டு, அரடா பட்டு, கொளக்குடி, கண்ணப்பன்நந்தல், அழகாநந்தல் ,உடையானந்தல் தென்மாத்தூர், உள்ளிட்ட ஊராட்சிகளில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன்,வழக்கறிஞர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக மாவட்ட நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2024 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?