/* */

ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்டம்

ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்டம்
X

வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி காலை ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் உற்சவர் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்யப்பட்டது.

சிறப்பு பூஜைக்கு பின்னர் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரோடும் வீதிள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்து சென்று வழிபட்டனர். தேர் கிராமம் முழுவதும் வலம் வந்தது.

சிறுமூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆங்காங்கே பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேர் மீது உப்பு, பொரி உருண்டை, மிளகு, சாக்லேட், இனிப்பு போன்றவைகளை இறைத்து பரவசத்துடன் வழிபட்டனர். தேர் செல்லும் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீர்மோர், வெல்லநீர், குளிர்பானம் போன்றவற்றை வழங்கினர்.

காவல்துறையினர் , மின் வாரியம், தீயணைப்புத் துறையினர் தேரோடும் வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Updated On: 5 May 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?