/* */

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

ஆரணி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
X

 பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக கிளியம்மாள் கலாமணி மற்றும் 6 உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி செயலாளராக முருகன் என்பவர் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அதிகாரி சீனிவாசன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் தீர்மானத்தை வாசித்தார். இதில் கிராமத்தில் உள்ள 456 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் வாசிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட பொதுமக்கள் ஜல் ஜுவன் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 22 March 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...