/* */

ஆரணியில் மாதிரி வாக்குப்பதிவு

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணியில் மாதிரி வாக்குப்பதிவு
X

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவை தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன் பாா்வையிட்டாா். அப்போது, 5 சதவீதம் வாக்குப்பதிவு செய்து ஆய்வு செய்தனா்.

எந்த சின்னத்துக்கு பட்டனை அழுத்துகிறோமோ அந்த சின்னம் காண்பிக்கிறதா என்றும், சரியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறதா என்றும் ஆய்வு செய்தனா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா், வட்டாட்சியா் மஞசுளா மற்றும் தோ்தல் பணியாளா்கள் உடனிருந்தனா்.

பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் தேர்வு

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மக்களவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்ட ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வாக்குச் சாவடிகள், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 18 வாக்குச் சாவடிகள், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 16 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இதேபோல், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 12 வாக்குச் சாவடிகள் என 65 பதற்றமான வாக்குச் சாவடிகளில் சுமுகமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக பொதுமக்கள் பதற்றமின்றி வாக்களிப்பதற்கும் ஏதுவாக நுண் பாா்வையாளா்கள் சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணியை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா, வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ரூபேஷ் குமாா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா்ப்பகராஜ் ஆகியோா் முன்னிலையில் தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனா்.

நிகழ்ச்சியில் தொடா்புடைய தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் , வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 13 April 2024 10:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’