/* */

மேற்கு அரணி ஒன்றிய குழு கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் தேவை என கோரிக்கை

பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்.

HIGHLIGHTS

மேற்கு அரணி ஒன்றிய குழு கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் தேவை என  கோரிக்கை
X

மேற்கு அரணி ஒன்றிய குழு கூட்டதத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

மேற்கு அரணி ஒன்றியத்துக்குட்பட்ட 11 பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சவிதா வரவேற்றார்.

அலுவலக அலுவலர் சிவக்குமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், 100 நாள் வேலை திட்டம் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் எங்களை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனவே 100 நாள் வேலை திட்ட பணிகளை வேண்டும்வழங்க என்றனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலளிக்கையில், தற்போது மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை முழுமையாக அறிவிக்கப்படவில்லை. சிறிய ஊராட்சிகளுக்கு 3 வாரங்கள் வேலை அளிக்கலாம். பெரிய ஊராட்சிகளுக்கு 2 வாரங்கள் மட்டுமே பணிகள் ஒதுக்கப்படும், அதுவும் பண்ணை குட்டை, நிலங்களுக்கு வரப்பு கட்டுதல், விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

கவுன்சிலர் மாது பேசுகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வராமலேயே கூட்டம் நடத்துகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த கல்வி அலுவலர், உயர்நிலைப் பள்ளிகளுக்கு எங்களிடம் கேட்க முடியாது முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து தான் பதில் கிடைக்கும் நாங்கள் தொடக்கப்பள்ளிகளில் இருந்து வந்திருக்கிறோம், தொடக்கப்பள்ளியில் இது போன்று நடந்திருந்தால் தகவல் தெரிவியுங்கள் என்றார்.

கவுன்சிலர் மாது பேசுகையில், நமது ஒன்றியத்தில் 76 பள்ளிகள் உள்ளன, 65 பள்ளிகளுக்கு மட்டுமே துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். 11 பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் இல்லை. இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் நாகேஸ்வரி கோபு பேசுகையில், தச்சாரம்பட்டு ஏரிக்கரை மிகவும் பலவீனமாக உள்ளது, ஏரி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் வசந்தராஜ் பேசுகையில், வண்ணாங்குளம், ராமசாணிகுப்பம் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார். மேலும் புலவன்பாடி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும், தேவிகாபுரத்திற்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பதில் அளித்தனர். பின்னர் உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.

Updated On: 28 Jan 2023 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  3. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  5. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  6. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  9. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  10. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை