/* */

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

ஆரணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
X

மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தேவிகாபுரம் போளூர் ஆகிய இடங்களில் அரசு மற்றும் சுயநிதியுதவி பெறும் 14 பள்ளிகளை சேர்ந்த 2,111 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது

ஆரணியில் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அந்தப் பள்ளியைச் சேர்ந்த 565 மாணவ, மாணவிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி - 427, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - 151, எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி - 78, இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி - 29, நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி - 65, புனித வளனாா் பள்ளி - 147, குன்னத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி - 96, அக்ராபாளையம் - 57, முள்ளண்டிரம்- 56 என 10 பள்ளிகளைச் சேர்ந்த 1,671 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன், தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கினாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் சிவானந்தம், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் சுந்தா், மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணாகுமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா் சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 274 மாணவ, மாணவிகள், பெரணமல்லூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - 69, பெண்கள் மேல்நிலைப் பள்ளி -73, மடம் அரசு மேல்நிலைப் பள்ளி -24 என 440 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை காயத்ரி தலைமை வகித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசன், தலைமை ஆசிரியா்கள் தனசேகரன், மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பரிமளா ரமேஷ் வரவேற்றாா்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சிவானந்தம், ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலாளர் மாமது, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Updated On: 10 Aug 2023 7:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு