/* */

சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி

திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி
X

பைல் படம்.

திருவண்ணாமலை பாவாஜி நகரில் 2 வீடுகளில் இடைப்பட்ட பகுதியில் காலியாக உள்ள மனை ஒன்றில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் முதற்கட்டமாக அடிதளம் அமைப்பதற்காக பில்லர் அமைப்பதற்காக பள்ளம் எடுக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் கட்டிட தொழிலாளர்கள் செங்கம் தாலுகா சே.நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45), வேடநத்தம் பகுதியை சேர்ந்த ஏழுமலை மற்றும் பெண் தொழிலாளி ஒருவர் அந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது பக்கவாட்டில் உள்ள வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேரும் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆறுமுகத்தை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏழுமலையும், மற்றொரு பெண் தொழிலாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி அருகே வாலிபர் தற்கொலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகர் என்பவருக்கும் வள்ளி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும் சந்திரசேகர் வள்ளி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக குடும்ப சொத்தை பிரித்து தரக்கோரி தனது தாயாருடன் சந்திரசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த சந்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சந்திரசேகரனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சந்திரசேகரின் மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் களம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Feb 2023 2:17 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்