/* */

காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வியாபாரிகளிடம் ஆரணி டிஎஸ்பி பேச்சு

கொள்ளை சம்பவங்களை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நகை கடை வியாபாரிகளிடம் துணை காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்

HIGHLIGHTS

காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு  வியாபாரிகளிடம் ஆரணி டிஎஸ்பி பேச்சு
X

காவல் நிலையத்தில் நகை வியாபாரிகள், அடகு கடை வியாபாரிகள் விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

ஆரணி நகர காவல் நிலையத்தில் நகை வியாபாரிகள், அடகு கடை வியாபாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் பேசும் போது,

காவல்துறைக்கு நீங்கள் ஒத்துழைப்பு அளித்தால், நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். உங்கள் கடைகளுக்கு நீங்கள் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் . சிசிடிவி கேமராவை கடையை மட்டும் கண்காணிக்கும் வகையில் பொருத்தாமல் வீதியையும் கண்காணிக்கும் வகையில் கேமராக்களை பொருத்த வேண்டும். அதிலும் தரமான கேமராக்கள் பொருத்த வேண்டும். பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் பாதுகாவலர்களை நியமிக்கும் போது காவல்துறைக்கு அவர்களைப் பற்றி தெரிவியுங்கள்.

ஆரணி நகர மக்களுக்கு சேவையாற்றும் வகையில் உங்கள் சங்கத்தின் சார்பாக உங்களுடைய வியாபார சாலைகளில் சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணிக்கவும் காவல்துறையுடன் இணைந்து இருங்கள் .உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள் என கூறினார்

கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள், அடகு கடை நகை வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 May 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்