/* */

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 53.23 லட்சம்

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக, ரூ.53 லட்சத்து 23 ஆயிரத்து 132 ரூபாய் பெறப்பட்டது.

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 53.23 லட்சம்
X

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 3 நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது; தைப்பூச விழாவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மற்ற நாட்களில் பக்தர்கள் அதிகளவு மலைக்கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றனர்.

இந்த நிலையில், திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் தமிழக அரசின் கொரோனோ வைரஸ் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் கோயில் ஊழியர்கள், முககவசம் அணிந்து, உண்டியல் என்னும் இடத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த 22 நாட்களில், 53 லட்சத்து 23 ஆயிரத்து 132 ரூபாய் பணம், மற்றும் 375 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி 3285 கிராமும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 29 Jan 2022 9:00 AM GMT

Related News