/* */

திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி

திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி
X

சாலை விபத்தில் இறந்த செல்வகுமார், பிரவீன்குமார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் ஒரகடம் பகுதியிலுள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவரது உறவினர் பிரவீன்சோப்ரா. இவரும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் அக்கா தங்கைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் செல்வகுமார் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் ராஜாஜி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார் மேலும் பிரவீன் சோப்ரா போரூர், ராமகிருஷ்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பிரவீன் சோப்ரா மணவாள நகரில் உள்ள தனது சகலை செல்வகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வேலையின் காரணமாக இருவரும் இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுப்பம் இறக்கத்தில் பின்னால் திருவள்ளூர் நோக்கி அதி வேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இழந்தனர். இந்த விபத்தை கண்ட லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்த பிரவீன்குமார், செல்வகுமார் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாரி உரிமையாளர் திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளராக இருக்கும் ஏ.ஜெ.பவுல். என்பதும் இவரது மனைவி ருக்மணி திருவேற்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார் என்பதும், ஏ.ஜெ.பவுல் ஆந்திர மாநிலத்திலிருந்து மண் ஏற்றி வந்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அக்கா தங்கை கணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




Updated On: 20 April 2022 3:01 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...