/* */

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் 18,500 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு
X

திருவள்ளூரில் 6 மாதத்திற்கு பிறகு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி ஜான் வர்கீஸ் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று, திருவள்ளூர் ஆர்.எம் ஜெயின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பூண்டி ஊராட்சி ஒன்றியம், மோவூர் ஊராட்சி, சதுரங்கவேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, பூண்டி அரசு உயர்நிலை மற்றும் சீத்தஞ்சேரி அரசு உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்றும் தனியார் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நாளை முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. அனைத்து நிர்வாகம் சார்பாக இன்று சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் சேர்ந்து 100% பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று பரவ காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சுத்தம் செய்யப்பட வேண்டி இருந்தது.

கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக சுத்தம் செய்து தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. நாளை முதல் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வருவதற்கு அனைத்து வசதிகளும் அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டாயம் முககவசம் அணிந்து தான் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதாவது, ஒரு காரணத்தினால் மாணவர்கள் முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வருகை புரிந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் முக கவசங்களும் தயார் நிலையில் உள்ளது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகள் நடைபெறும். 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும். ஆதலால் அதிகபட்சமாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத மற்ற பணியாளர்களும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். இதில் சுமார் 18,500 ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஆசிரியர் அல்லாத மற்ற பணியாளர்கள் 4ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 3, 200 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்பது மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து மாணவ மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதாவது மாணவ, மாணவியருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டால் உடனே, பள்ளி வாயிலாக பரிசோதனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Updated On: 31 Aug 2021 3:25 PM GMT

Related News