/* */

ஊத்துக்கோட்டை அருகே பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டை அருகே பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
X

ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தமிழக-ஆந்திர எல்லை சுருட்டப்பள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

சர்வ மங்கள சமேத ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் கோவில் பிரதோஷ விழா வெகு விமர்சையாக நேற்று மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவர் சிவபெருமான், மற்றும் ஆலய வளாகத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், ஜவ்வாது, மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்த பின்னர் வண்ண மலர்களாலும், பட்டு உடைகளாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப,தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பின்னர் பல்லாக்கில் வைத்து கோவில் சுற்றி மேல தாளங்கள் முழங்க, வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்குன்றம், பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், ஆந்திர மாநிலம் சத்தியவேடு, வரதயபாளையம், சித்தூர், திருப்பதி,காளஹஸ்தி, நகிரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி நெய் தீபங்களை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு வந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 4 April 2023 5:00 AM GMT

Related News