/* */

அடுத்த தேர்தல் நடக்குமா..? பரப்புரை பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் கேள்வி..?

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றத்தில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்

HIGHLIGHTS

அடுத்த தேர்தல் நடக்குமா..? பரப்புரை பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் கேள்வி..?
X

ப.சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

1952-இல் ஆரம்பித்து 2024 வழக்கமான தேர்தல் அல்ல எனவும், 5 ஆண்டுகள் கழித்து மற்றொரு தேர்தல் வருமா என்ற கவலை இருக்கிறது எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை திமுக வடகிழக்கு மாவட்டம் சார்பில் திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றத்தில் பரப்புரை பொது கூட்டம் நடைபெற்றது.மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் சுதர்சனம் ஏற்பாட்டில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த பொது கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.பின்ன பேசிய அவர், பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்

சுதந்திரம் இருக்கும் போது தான் சுதந்திரத்தை காப்பாற்ற முடியும். உயிர் பிரிந்த பிறகு உயிரை காப்பாற்ற முடியாது எனவும், பாஜகவில் வாஜ்பாயும் இருத்திருக்கிறார்.பல நன்மைகள் செய்தார், சில தவறுகளும் செய்திருக்கலாம். மோடி எந்த நன்மைகளை செய்யவில்லை எனவும்,

இந்தியாவை இந்துத்துவா நாடாக ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர் என சர்வாதிகார போக்குடன் அறிவிக்க உள்ளனர் எனவும், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு அம்பேத்கர் சாசனத்தில் நம்பிக்கை கிடையாது எனவும் வர்ணாஷ்ரமத்தில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது எனவும், இந்தியாவில் மக்கள் சமத்துவமாக வாழ்வது அவர்களின் பிடிக்கவில்லை எனவும், இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்களை இரண்டாம் கட்ட மக்களாக பார்க்கிறார்கள் எனவும் இந்தியாவை இந்துத்துவா நாடாகவும், பல வர்ணங்கள் உள்ள நாடாக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கின்றனர் எனவும்,இந்தி மொழி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே எதிர்க்கிறது.

மாநில கட்சிகளை ஒடுக்க வேண்டும், காங்கிரஸை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் திட்டம். அரசியல் கட்சிக்கு வருமானம் கிடையாது, ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ₹3500 கோடிக்கு வட்டி, வழக்கு காங்கிரஸ் மீது போடப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். சினிமாவில் கூட இது போன்று நடைபெறவில்லை. 3 ஆண்டுகள் கழித்து முதல்வரை கைது செய்ய முடியும் என்றால் 3 மணி நேரத்தில் கைது செய்யலாம் இல்லையா? இந்த தேர்தலில் மிகுந்த கவனத்துடன் மக்கள் வாக்களிக்க வேண்டும்

மோடி அரசு, அதிமுக அரசு, திமுக அரசு ஒப்பிட்டு பாருங்கள்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ₹6000 கோடி பயிர்கடன ரத்து செய்துள்ளதாகவும், 100 நாள் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் எனவும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் கூலி ₹400-ஆக உயர்த்தப்படும் எனவும், வங்கியில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ்.

10 ஆண்டுகள் ஆட்சியில் மோடி என்ன செய்தார் எனவும். சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, மோடி வந்தாரா? இப்போது 5 நாட்கள் வரப்போகிறாராம், தமிழ்நாடு மக்கள் துன்பத்தில் இருந்த போது ஏன் வரவில்லை. தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. வேலை இல்லாமைமை,,விலைவாசி ஏற்றம் இவையே மோடியின் சாதனை.

முதல்வர் வெள்ள நிவாரண நிதி கேட்கிறார். இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை.10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என மோடி கூறினார்.ஆனால் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என உறுதி கூறுகிறேன்.

கச்சா எண்ணெய் விலை குறைகிறது, பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது எனவும்,கடந்த 5 ஆண்டுகளில் கார்பரேட் முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் கோடியை ஈட்டுகிறார்கள்.

மதுரையில் பெண்மணி ஒருவர் இலவச பயணத்தில் சென்று ரூ.1300 மிச்சம் செய்தார்.நீங்கள் அது போல் செய்து விடாதீர்கள், போக்குவரத்து துறை போண்டியாகி விடும் என தெரிவித்தார். உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள்;முடிந்தவர்கள் ஆட்சி செய்வார்கள் என பிரதமரை சாடினார்.

காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த போது பள்ளிக்கூடமா, சமையல் கூடமா என கேட்டனர்.மதிய உணவு திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2.7 லட்சம் கோடி பெண்கள் படித்து கொண்டிருக்கிறார்கள்.

காலை உணவு திட்டம் ஒரு நாள் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என நம்புகிறேன் எனவும், மத்தியில் பாசிச அரசு அகற்கப்பட வேண்டும் எனவுமல தெரிவித்தார்.

Updated On: 5 April 2024 1:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...