/* */

பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா போராட்டம்.

milk producers agitation at collector office ஆந்திரா மாநிலம் நெல்லூர் சந்தையிருந்து வாங்கிவரப்பட்ட கறவை மாடுகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கவரைப்பேட்டை போலீசார் விடுவிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர்   கலெக்டர்  ஆபீஸ் முன்  தர்ணா போராட்டம்.
X

பால்  உற்பத்தியாளர்கள்  மாடுகளை விடுவிக்க  வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம் நடத்தினர்  

milk producers agitation at collector office

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பால் உற்பத்தியாளர் ராஜா என்பவர், கடந்த ஆண்டு 2022 ஜூலை 13--ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஓங்கல் மாட்டுச் சந்தையில் கால்நடை மருத்துவரின் சான்றிதழுடன் ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 கறவை மாடுகளை வாங்கி வந்துள்ளார்.

தமிழக எல்லையான கவரைப்பேட்டை போலீசார் சட்ட விரோதமாக இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ததாகவும், ஆனால், கறவை மாடு வாங்கியதற்கான மருத்துவ சான்றிதழ் கொடுத்தும் போலீசார் விடுவிக்காமல் மாட்டை மெய்யூரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். அதனைத் ‌தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்‌ ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்த கறவை மாடு சட்டவிரோதமாக இறச்சிக்காக கொண்டு வந்தது கிடையாது என்றும் முறையாக உரிமையாளர் பால் உற்பத்தியாளர் என்பதால் அவரிடம் மாட்டை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி அன்று உத்தரவிட்டிருக்கிறது.,

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டு 4 மாதம் கடந்தும் கோசாலையில் மாடுகளை விடுவிக்க மறுப்பதாகவும் , மாடுகளின் உரிமையாளர் ராஜா, சக பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் கேனுடன் வந்து மாட்டை விடுவிக்க கோரி பதாகைகள் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அரிகிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளரிடம் மாடுகளை விடுவிக்க கோரி தொலைபேசியில் பேசி சமாதானம் செய்து வைத்ததால் போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 19 July 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை