/* */

பட்டரைபெரும்புதூரில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம்: அமைச்சர் திறப்பு

Milk Station -பட்டரைபெரும்புதூரில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை அமைச்சர் .நாசர் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

Milk Station | New Shop Opening
X

திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், பட்டரைபெரும்புதூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்தார்

Milk Station -திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், பட்டரைபெரும்புதூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் நாசர் கூறியதாவது: பட்டரைபெரும்புதூரில் புதிதாக 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டதன் மூலம் 25 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் தரமான பாலை ஒன்றியத்திற்கு அனுப்பி அதற்குரிய விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. பால் பதப்படுத்தும் பணி உடனடியாகவும், எளிமையாகவும் அச்சங்கத்தில் நடைபெறுவதால்; பால் கெட்டு போகாமல் நீண்ட நேரம் பால் பதப்படுத்தப்பட்டு தரமான பால் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையத்தின் மூலமாக இப்பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் பால் உற்பத்தி பெருகி பொருளாதாரம் மேம்படைய வழிவகுக்கிறது.

இப்பட்டரைபெரும்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பாலானது காக்களுர் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு அவைகள் பால் பாக்கெட்டுகள் மூலமாக பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. இதனால் பால் விரைவில் கெட்டு போவது தடுக்கப்பட்டு சுத்தமான, தரமான தூய பால் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் நாசர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆணையர் மேலாண்மை இயக்குநர் மரு.ந.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளுர் ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார், துணை பதிவாளர் (பால்வளம்) சித்ரா, பட்டரைபெரும்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ராமசந்திரன், பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.கிறிஸ்டி(எ)அன்பரசு, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால்.

மாவட்ட நிர்வாகிகள் ப.சிட்டிபாபு, கே.ஜெ.ரமேஷ், எஸ்.ஜெயபாலன், எஸ்.மகாலிங்கம், சி.சு.ரவிச்சந்திரன், டி.மோதிலால், டி.கே.பாபு, ஒன்றிய கவுன்சில் சுபாஷினி பாஸ்கர், ஒன்றிய நிர்வாகிகள் கே.பாஸ்கர், ஆர். சித்ரா ரமேஷ், தங்கனூர் அ.ஆனந்த், தா.நடராஜன், கோ.டில்லிபாபு, பி.தேவேந்திரன், எம்.செளக்கர்பாண்டியன், பூவை சுதாகர், எம்.எம்.லிங்கேஷ், கே.ஜி.ஆர்.ராஜேஷ்குமார், கு.பிரபாகரன், எம்.எஸ்.அருண் குமார், ஆர்.சரவணன், ராஜா சிங், கௌதம், ஆர்.திலிப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


.

Updated On: 27 Aug 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்