/* */

ரூட் தல விவகாரத்தில் கத்தியை காட்டி மிரட்டிய மேலும் 2 மாணவர்கள் கைது

திருவள்ளூர் அருகே ரூட் தல விவகாரத்தில் கத்தியை காட்டி மிரட்டிய மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ரூட் தல விவகாரத்தில்   கத்தியை காட்டி மிரட்டிய  மேலும் 2  மாணவர்கள் கைது
X

கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள்.

திருவள்ளூர் அடுத்து ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதிரூட் தல போட்டி விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி. மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.அந்த மோதலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் தினேஷ் தலையில் வெட்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் கத்தியைக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தரையில் தேய்த்தப்படியும் ஜல்லி கற்களால் தாக்கிகொண்டு காத்தியால் வெட்டினர். இந்த விவகாரத்தில் திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மாநில கல்லூரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பு சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அதில் கடந்த 23ஆம் தேதி அன்று திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் (20 )என்ற பச்சையப்பன் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பச்சையப்பன் கல்லூரி மாணவர் மெர்லின் (20 )சுமன் (20) ஆகிய இரண்டு பேரை ரயில்வே இருப்பு பாதை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பச்சையப்பன் கல்லூரி மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பச்சையப்பன் கல்லூரி மாநில கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதால்.இத்தகைய மாணவர்கள் மோதல்களை தவிர்க்கும் வகையில். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை கடிதத்தை திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

Updated On: 29 Aug 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  4. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  6. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  7. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  8. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா