/* */

திருவள்ளூரில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Manja Pai Bag -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
X

மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

Manja Pai Bag -ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக.முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு, "பிளாஸ்டிக்குக்கு எதிரான மக்கள் பிரசாரம்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.

இதனிடையே கடந்த 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற மக்கள் பிரசாரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை விற்பனை இயந்திரம் குறித்த விவரங்களை வழங்கவும் அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விரிவான அறிக்கையை அளிக்கவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் நிறுவப்பட்டது.

இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் உதவி பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக்கொள்ளலாம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 10:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...