/* */

ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான 5 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் திறப்பு

ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான 5 துணை வேளாண் விரிவாக்க மையங்களை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான 5 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் திறப்பு
X
அமைச்சர் நாசர் வேளாண் விரிவாக்க துணை மையங்களை திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான 5 துணை வேளாண் விரிவாக்க மையங்களை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட, வெள்ளவேடு பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்ட மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, திருத்தணி சந்திரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்கள். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் என்.பி. மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்து வெள்ளவேடு உட்பட சின்னநாகப்பூண்டி, பாதிரிவேடு, பொன்னேரி மற்றும் பாண்டேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா ரூ.38 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான ஐந்து துணை வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பார்வையிட்டார்.

அப்போது அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியாவிலேயே மூன்று மாநிலங்களில் மட்டும் தான் வேளாண் துறைக்கென தனியாக ஒரு பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.33,000 கோடி விவசாயத்திற்கென்று ஒதுக்கிய பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும். திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 14 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களும், 28 துணை வேளாண் விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன. துணை வேளாண் விரிவாக்க மையங்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முதற்கட்டமாக ஒரு துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு ரூ.38 இலட்சம் வீதம் 8 துணை வேளாண் விரிவாக்க மையங்களின் புதிய கட்டுமானப் பணிக்கு மொத்தம் ரூ.3.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது.

நாம் உற்பத்தி செய்கின்ற அனைத்து பொருட்களையும் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, அதன் மூலம் வாணிபம் செய்வதற்கு ஏதுவாக ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் 8 துணை வேளாண் விரிவாக்க மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு பெற்று கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று முதற்கட்டமாக ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் 5 துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பாட்டிற்காக, அம்மையங்களுக்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக பேரம்பாக்கம், பட்டரைப்பெரும்புதூர் மற்றும் கனகம்மாசத்திரம் முதலிய துணை வேளாண் விரிவாக்க மையங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும். இந்த துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் இடுபொருட்களான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டுக்காரணிகள் முதலியவை விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான அளவில் பாதுகாப்பாக இருப்பு வைத்து விநியோகம் செய்ய இத்துணை வேளாண் விரிவாக்க மையங்கள் மிகவும் வசதியாக இருக்கும். இதனால் சுமார் 50,000 விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய ஒரு இலட்சம் விவசாயிகளுக்கென்று மின் இணைப்புகளை தந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சருக்கு உண்டு. தற்பொழுது ஒரு சில நாட்களுக்கு முன்பு மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கி, வேளாண் துறை முன்னேற்றத்திற்கு ஒரு வலிமையான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலம் செயல்படுத்தப்படாமல் இருந்த திட்டங்களை எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மெருகூட்டி எந்தெதந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அவையனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளின் தேவைகளை அறிந்ததன் அடிப்படையில் தான் ரூ.33,000 கோடியை வேளாண்மை துறைக்கென தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கி அத்துறைக்கான தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வழிவகுத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பும், ஒரு வாரத்திற்கு முன்பு 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பும் என மொத்தம் ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில், பல நல்ல திட்டங்களையெல்லாம் தீட்டி இந்த 18 மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கியுள்ளார். மேலும் இது தொடரும் என்றும் கூறியுள்ளார். விவசாயிகள் மீது அக்கறை கொண்டுள்ள இந்த தமிழக அரசு விவசாயிகளுக்காக நிச்சயமாக பாடுப்பட்டு அவர்களின் வாழ்க்கை ஆதாரத்தை உயர்த்தும்.

இவ்வாறு அமைச்சர் நாசர் பேசினார்.

35 பயனாளிகளுக்கு ரூ.24,08,160 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, வேளாண்மை இணை இயக்குனர் முனைவர்.எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், ஒன்றிய நகரச் செயலாளர்கள் ப.ச.கமலேஷ், சி.சு.ரவிச்சந்திரன், எஸ்.மகாலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் இ.காந்தபாபு, சி.அண்ணாகுமார், சுமதிவிஜயகுமார், ஜெ.சாக்ரடீஸ் ஜெ.சுகுமார், எம்.குணசேகரன், பா.கந்தன், மோரை திவாகர், ஜி.சி.சி.கருணாநிதி, ஜி.பி.பரணிதரண், இ.பிரதீப், பிரவீன்குமார், கவிஞர் ராஜேஷ், சர்மன்ராஜ், உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Nov 2022 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...