/* */

காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மத்திய upஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த்செந்தில் எல்லாபுரம் மத்திய ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். 

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த்செந்தில் எல்லாபுரம் மத்திய ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த்செந்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில்,எல்லாபுரம் மத்திய ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஆயிலச்சேரி, கன்னிகாபுரம், பூச்சிஅத்திப்பேடு, கோடுவெளி, காரணிபாட்டை, குருவாயல், பாஷிகாபுரம், சேத்துப்பாக்கம், செம்பேடு, வெங்கல், கொமக்கம்பேடு, மாகரல் உள்ளிட்ட பகுதிகளில் சிறந்த ஜீப்பில் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு,எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமை தாங்கினார். இதில்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த்செந்திலை ஆதரித்தும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இப்பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த வளர்ச்சி திட்டப் பணிகளை அடுக்கடுக்காக எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

அவர் செல்லும் இடமெல்லாம் பகுதி மக்கள் மாலை அணிவித்து, மலர் தூவி, சால்வை அணிவித்து, தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும், உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில்,காயத்ரி ஸ்ரீதரன்,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு,எல்லாபுரம் முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் சம்பத்,திருநிலை டி.கே.முனிவேல்,வெங்கல் வி.ஜே.சீனிவாசன்,கோடுவெளி எம்.குமார்,வெங்கல் பாஸ்கர், குருவாயல் இ.ஜெகநாதன், குருவாயல் ராஜேஷ், பாஷிகாபுரம் நந்தகோபால் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2024 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?