/* */

பொன்னேரியில் தேசிய மாணவர் படையினரின் சிறப்பு முகாம்

பொன்னேரியில் தேசிய மாணவர் படையின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொன்னேரியில் தேசிய மாணவர் படையினரின் சிறப்பு முகாம்
X

பொன்னேரியில் தேசிய மாணவர் படையின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படையின் சார்பில் பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ராணுவ வீரர்கள் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

முகாமின் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய ராணுவத்தின் கர்னல் மசூம்தார் பங்கேற்றார்.முன்னதாக சுற்றுச் சூழல் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாணவிகள் நடத்தி காட்டினர்.

இந்திய ராணுவத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து ஒளிப்படம் வாயிலாக மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கும் வகையிலான மாணவிகள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

விழாவில் கர்னல் மசூம்தார் உரையாற்றுகையில் இந்த முகாமில் உங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகள் சற்று கடினமாக இருந்தாலும் பிற்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என குறிப்பிட்டார். பின்னர் அவர் படை முகாமில் மாணவிகள் சார்பில் அளிக்கப்பட்ட ராணுவ முறையிலான அணிவகுப்பை ஏற்று கொண்டு மாணவிகளை வெகுவாக பாராட்டினார்.

Updated On: 19 May 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  7. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  8. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  9. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!