/* */

பொன்னேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா

பொன்னேரியில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ரத்துசெய்யப்பட்ட ஹரிஹரன் சந்திப்பு திருவிழா விமரிசையாக நடந்தது

HIGHLIGHTS

பொன்னேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா
X

பொன்னேரியில்   கோலாகலமாக நடந்த  ஹரிஹரன் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்

பொன்னேரியில் கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் ரத்து செய்யப்பட்ட ஹரிஹரன் சந்திப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றஉ பெருமாளையும் சிவபெருமானையும் ஒருசேர தரிசித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவாயர்பாடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி ஹரிக்ருஷ்ண பெருமாள் தினந்தோறும் அனுமந்த, புன்ன, அன்ன வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித் தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. ஒரு காலகட்டத்தில் வைணவம் பெரிதா அல்லது சைவம் பெரிதா என்ற சமய மோதல் வெடித்து உச்சத்தில் இருந்து வந்ததாகவும், இதனால் மிகுந்த கவலையுற்ற பரத்வாஜ முனிவரும் அகத்திய மாமுனியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை பக்தர்களுக்கு எடுத்துரைக்க தங்கள் முன் ஒன்றாக காட்சியளிக்க வேண்டி இரு முனிவர்களும் கடும் தவமிருந்ததன் பயனாக அவர்கள் கண் முன்பு பெருமாளும் சிவனும் ஒன்றாக காட்சியளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட இந்த பிரம்மோற்சவ திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது. ஹரிகிருஷ்ண பெருமாளும் அகதீஸ்வரரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஹரி ஹரன் சந்திப்பு திருவிழாவையொட்டி திருவாயற்பாடியில் உள்ள தனது ஆலயத்திலிருந்து நள்ளிரவு சவுந்தர்யவள்ளி தாயாருடன் கருட வாகனத்தில் மேளதாளம் முழங்க பிரம்மிப்பூட்டும் வானவேடிக்கையுடன் ஹரிகிருஷ்ண பெருமாள் பிரதான மாடவீதிக்கு வந்தடைந்தார். அதே நேரத்தில் விநாயகர், முருகன் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் ஆனந்தவள்ளி தாயார் சகிதமாக சிவபெருமான் ஆலயத்திலிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ பிரதான மாடவீதியை வந்தடைந்தார்.

அங்கு மூன்று முறை முன்னும் பின்னுமாக ஒடியாடி விளையாடிய ஹரியும் ஹரனும் அதிகாலை சரியாக ஆறு மணிக்கு நேருக்கு நேர்வந்து சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது விண்ணை தொடும் அளவிற்கு வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் முன் பாம்பு சீறிய பட்டாசு கண்டு பரவசம் அடைந்தனர். தமிழகத்தில் வேறெங்கும் நடைபெறாத முக்கிய நிகழ்வான ஹரிஹரன் சந்திப்பை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் திரளான பக்தர்கள் ஹரியும் ஹரனையும் சந்தித்து ஆசி பெற்றனர். அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா எனவும் ஓம் நமோ நாராயணா, ஒம் நமச்சிவாயா என்றழைத்த கோஷம் விண்ணை பிளந்தது. சந்திப்போற்சவ வைபவம் முடிந்ததும் சிவனும் பெருமாளும் தத்தமது ஆலயம் திரும்பினர்.


Updated On: 22 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு