/* */

மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மின்பழுது சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26) இவர் அதே பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவர் குடியிருக்கும் பகுதியில் மின் இணைப்பு தடைபட்டால், மின் ஊழியர்களை எதிர்பார்க்காமல் விக்னேஷ் அதனை சரி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் கிராம மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருவதை அறிந்த விக்னேஷ் அதனை சரி செய்ய மின் ஊழியர்கள் யாரும் வராத காரணத்தால், மின் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின் இணைப்பை சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து மின் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் இருந்தார்.

இதனை பார்த்த கிராம மக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Sep 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது