/* */

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

HIGHLIGHTS

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி ஏற்பு
X

வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கினார் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூகத்தாக்கமின்றி அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் வாசிக்க அனைத்து அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்கள்.

பின்னர் புதிய வாக்காளராக சேர்க்கப்பட்டுள்ள இளம் வாக்காளர் 5 பேர்களுக்கு வண்ணப்புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பொது (பொ) ஷேக்ஐயுப்கான் , தேர்தல் வட்டாட்சியர் ஆர்.கந்தப்பன், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்