/* */

பொதுமக்கள் புகாரளித்தால் உடனடி நடவடிக்கை - மின் வாரிய அதிகாரி உத்தரவு

மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அவர் பேசியிருந்தார்.

HIGHLIGHTS

பொதுமக்கள் புகாரளித்தால் உடனடி நடவடிக்கை - மின் வாரிய அதிகாரி உத்தரவு
X

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கே டி சி நகரில் அமைந்திருக்கும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசினார்.

மின்துறை அமைச்சர் உத்தரவின் அடிப்படையில், கோடை காலம் முடியும் வருகிற மே 31-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு எந்த பணிகளுக்காகவும் மின்தடங்கல், மின்தடை ஏற்படுத்த கூடாது எனவும், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் அமைந்துள்ள பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மின்தடங்கல்களை இரவு-பகல் பாராது உடனடியாக சரி செய்து வந்துள்ளனர். இதற்கு காரணமான அனைத்து மின் பொறி யாளர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குருசாமி கூறினார். அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு நெறிமுறை களுடனும் பணிபுரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி- மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது. இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணி புரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினார் அவர்.

வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப் படுத்தவும், பீங்கான் வட்டு பதிலாக இயற்கை இடர் பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு மற்றும் பாலிமர் முள் சுருள் பொருத்துவதற்கு தேவை யான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் மின் நுகர் வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப் பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அவர் பேசியிருந்தார்.

Updated On: 23 May 2023 6:01 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு