/* */

வடக்கன்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

வடக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

வடக்கன்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
X

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கன்குளம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கிராமபுறங்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிராமத்தில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் முன்னேற்றத்தில் தமிழக முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராமத்தில் உள்ள பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து பயனடைய வேண்டும். இன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சியின் வரவு செலவு கிராம மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் நடைபெற்றுவரும் அனைத்து பணிகளும் ஒழிவு மறைவு இன்றி கிராம மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இந்த கிராம சபைக்கூட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் நான்கு முறை மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற்று வந்தது. முதலமைச்சர் வருடத்திற்கு ஆறு முறை கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கிராம முன்னேற்றத்திற்காகவும், ஒழிவு மறைவு இன்றி பணிகள் நடைபெறுவதற்கும் கிராம ஊராட்களில் கிராம சபை கூட்டம் நடத்தும் முறையை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்தார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நமது இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு தாமிரபரணி நதியில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி பெற்று இராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். நமது தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தபட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைக்கிறது. மகளிர்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் செய்வதற்கு முன்வந்தாள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுயதொழில் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். வள்ளியூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் நலனில் அக்கரை கொண்டு இந்த அரசு செயல்படுகிறது என சட்டமன்றப்பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

இந்த கிராம சபைக்கூட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சரின் மஞ்சள் பை திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், சாந்தி சுயம்பு,மருத்துவ அலுவலர் கோலப்பன், வேளாண்மை உதவி இயக்குநர் சுனில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜான் கென்னடி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 12:59 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...