Begin typing your search above and press return to search.
ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.25 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.1,25,000 பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் விலக்கு அருகில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்ட எடுத்து சென்ற ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை வட்டாட்சியர் வெற்றிசெல்வி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.