/* */

திருச்சிியில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருச்சிியில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுகூட்டத்தில் 7 சட்டமன்ற உறுப்பினர்களும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் பங்கேற்று அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கொரோவின் பாதிப்பு எப்படி உள்ளது என்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அனைவரும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு சென்னையில் எப்படி வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல திருச்சியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு வார் ரூம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் டிஆர்ஓ மற்றும் அவருக்கு கீழ் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவர்களை தொடர்பு கொண்டு எந்த உதவிகளையும் பெறலாம் என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் ரெம்டெசிவர் மருந்தானது மத்திய அரசிடமிருந்து பெறுவது மிகக் குறைவாக இருப்பதால் அதை அதிகப்படுத்தி பெற மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் மேலும் ஒரு நாளைக்கு 300 பேருக்கு கொடுக்கப்படும் இடத்தில் 500க்கும் அதிகமானோர் கூட்டமாக சேர்ந்து வரிசையில் என்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நாங்கள் முதலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும், தொகுதிகளுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பல பெற்றோர்களிடம் இருந்து நானும் பல புகார்களை பெற்று வருகிறேன்

குறிப்பாக ஒடாத பேருந்துக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் பள்ளிக்கு வராத நிலையில் பள்ளி சீருடை கான கட்டணம் வசூலிப்பதும் என்று தொடர்ந்து வசூல் செய்து வருவதாக எனக்கு கூட வந்த புகாரின் அடிப்படையில் விரைவில் அதுகுறித்து தனியார் பள்ளிகளோடு ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 14 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!