/* */

திருச்சியில் நன்னடத்தை விதி மீறிய ரவுடி மீண்டும் சிறையில் அடைப்பு

திருச்சியில் நன்னடத்தை விதியை மீறிய ரவுடியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் நன்னடத்தை விதி மீறிய ரவுடி மீண்டும் சிறையில் அடைப்பு
X

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சாpக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் திருச்சி மாநகரம் பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி விமல்ராஜ் (வயது 23) பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், மேற்படி ரவுடி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, பாலக்கரை காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி அவரை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை விமல்ராஜ் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் விமல்ராஜ் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் வழிப்பறி செய்தல் மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர் மீது பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 28.04.22-ந்தேதி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 257 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி ரவுடி விமல்ராஜ் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 29 April 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...