திருச்சி: லால்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக சிவராமன் பதவி ஏற்பு

திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக சிவராமன் பதவி ஏற்றார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி: லால்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக சிவராமன் பதவி ஏற்பு
X
லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக சிவராமன் பதவி ஏற்றார்.

திருச்சி மாவட்டம் துறையூர் இன்ஸ்பெக்டராக இருந்த விதுன்குமார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் இன்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். அந்த மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு தற்போது அவர் முசிறி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதே போல சப்-இன்ஸ்பெக்டராக இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டரான சிவராமன் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

பெரம்பலுார் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பெரம்பலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கலா, பெரம்பலூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். லால்குடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் லால்குடி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட எஸ்.சிவராமன் இன்று காலை லால்குடி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Updated On: 25 Nov 2021 6:15 AM GMT

Related News