/* */

காவிரியில் வெள்ளப்பெருக்கு: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளனர்.

HIGHLIGHTS

காவிரியில் வெள்ளப்பெருக்கு: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்
X

திருச்சி காவிரி கரையில் பேரிடர் மீட்பு குழுவினர் உரிய சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் காவிரி ஆறு அதன் இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது. திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில்45 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 85 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


இந்நிலையில் காவிரியில் வெள்ள அபாய பகுதிகளான திருச்சி கோட்டை மற்றம் ஸ்ரீரங்கம் பகுதியில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களை வெள்ள பாதிப்பு பகுதியில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்வதற்காக ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 80 காவலர்கள் கொண்ட பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவினரை தயார் நிலையில் இருப்பதற்கு அறிவுறுத்தி உள்ளார்.அவர்கள் உரிய பாதுகாப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Updated On: 4 Aug 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  4. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  7. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  8. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  9. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  10. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?