/* */

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சிறப்பு மலர் : தூத்துக்குடியில் வெளியீடு

தூத்துக்குடியில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் குறித்த சிறப்பு மலரை எம்.ஜி.ஆர் சிலை முன்பு ரசிகர்கள் வெளியிட்டனர்.

HIGHLIGHTS

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சிறப்பு மலர் : தூத்துக்குடியில் வெளியீடு
X

உலகம் சுற்றும் வாலிபன் சிறப்பு மலரை வெளியிடும் அதிமுக நிர்வாகிகள்.

அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்துள்ள உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு கடந்த 3ம் தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளியானது. இந்நிலையில், தூத்துக்குடியில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் சிறப்பு மலர், பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லட்சுமணன் தலைமையில் அதிமுக மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் வெளியிட்டார்.

முதல் பிரதிநிதியை முன்னாள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, எம்.ஜி.ஆர் ரசிகர் அய்யாத்துரை ஆகியோர் பெற்றனர். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சிறப்பு மலரை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மிக்கேல், ரசிகர்கள் ஜனார்த்தனம், குமாரவேல், கிருஷ்ணன், நெப்போலியன், முருகன், நவநீதன், கோபால், மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கல்விகுமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் பொன்னம்பலம், தொப்பை கணபதி, பாலு, சேரந்தையன், பரமசிவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!