/* */

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் விவகாரம்: துப்பாக்கி குண்டுகள் தேடல்

தூத்துக்குடி ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் விவகாரம்: துப்பாக்கி குண்டுகள் தேடல்
X

தூத்துக்குடி ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

கோவளம் கடற்கரை பகுதியில் ரவுடி துரைமுருகனை பிடிக்க சென்ற போலீசாரை ரவுடி தாக்கியதை தொடர்ந்து போலீசாரின் பதில் தாக்குதலுதலில் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவ இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் ரவுடி உடம்பை தொலைத்துவிட்டு வெளியே சென்ற 3 தோட்டக்கள் மற்றும் வானத்தை நோக்கி சூட்ட 1 தோட்ட உட்பட 4 துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த அக்டோபர் 15ம் தேதி ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை அளிக்க ஏற்கனவே தமிழக உள்துறை செயலாளருக்குத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி கூட்டாம்புளி அடுத்துள்ள திருமலையாபுரத்தைச் சேர்ந்த துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி பிற்பகலில் முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த துரைமுருகனை போலீசார் வளைத்துள்ளனர். அப்போது துரைமுருகன் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றுள்ளார். காவல் ஆய்வாளர் தாக்கிவிட்டு, துரைமுருகன் தப்பி ஓட முயன்றுள்ளார். இதன் காரணமாகத் தற்காப்புக்காக சப் இன்ஸ்பெக்டர் துரைமுருகனை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் கழுத்து, தலை உட்பட 3 இடங்களில் குண்டு பாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெல்வேலியில் ஜெகதீசன் என்ற பூ வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் துரைமுருகன் தேடப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நெல்லை அருகே ஜெகதீசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகள் துரைமுருகன் மீது நிலுவையில் இருந்த நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த மனித உரிமை அமைப்புகள், இதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகப் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இது சம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் ரவுடி உடம்பை தொலைத்துவிட்டு வெளியே சென்ற 3 தோட்டக்கள் மற்றும் வானத்தை நோக்கி சுட்ட 1 தோட்டா உட்பட 4 துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

Updated On: 28 Oct 2021 4:50 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...