/* */

சாலையோரத்தில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்... போலீஸார் விசாரணை…

விளாத்திக்குளம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை சாலையோரத்தில் வீசிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

சாலையோரத்தில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்... போலீஸார் விசாரணை…
X

சாலையோரத்தில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் சில இடங்களில் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கேரளத்துக்கு கடத்தப்படுவதும், அவற்றை போலீஸார் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்துள்ளதால் கேரளா எல்லைப் பகுதியில் போலீஸார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, ரேஷன் கடைகளில் பொதுமங்களுக்கு வழங்கப்படும் அரிசியை வசதி படைத்தவர்கள் சிலர் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிக பணத்தை கொடுத்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்குவதாகவும், அவ்வாறு வாங்கப்படும் அரிசி மூட்டைகளை பட்டை தீட்டி கூடுதல் விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், குறைந்த விலைக்கு வாங்கிய ரேஷன் அரிசி மூட்டைகளை மறைமுகமாக பதுக்கி வைத்து அவற்றை மற்ற அரிசிகளுடன் கலந்து இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் கைப்பற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட சுற்றுவட்ராபப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக அவ்வப்போது போலீஸார் கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை விளாத்திகுளம் காமராஜ்நகர் 4, 5, 7 ஆகிய தெருக்களில் உள்ள சாலையோரத்தில் மூட்டைகள் ஆங்காங்கே வீசப்பட்ட நிலையில் அனாதையாக கிடந்தன. சில மூட்டைகளில் இருந்து அரிசி வெளியேறி சிதறி கிடந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி உக்கள் உடனடியாக விளாத்திகுளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் பார்த்தபோது, சுமார் 13 மூட்டைகளில் 1.3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற துணை வட்டாட்சியர் சரவணபெருமாள் மற்றும் அலுவலர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்த காமராஜ்நகர் பகுதியில் பெரும்பாலும் அரசு அதிகாரிகள் வசித்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் எப்படி ரேஷன் அரிசி மூட்டைகள் வந்தன என கேள்வி எழுந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி மூட்டைகளாக கட்டி சிலர் கேரளாவுக்கு கடத்த முயன்றிருக்கலாம் என்றும் போலீஸாரைக் கண்டதும் ரேஷன் அரிசி மூட்டைகளை சாலையோரத்தில் வீசி சென்றிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகமடைந்துள்ளது.

அதுமட்டுமின்றி கடத்தல்காரர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை வீசி சென்றனரா? என்பது குறித்தும் விளாத்திகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காமராஜ்நகர் பகுதியில் சாலையோரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் அனாதையாக கிடந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 7 Nov 2022 4:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!