/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 4 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (38) என்பவர் கடந்த மாதம் 13 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்யபப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கைதான தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த முகேஷ் (23), தூத்துக்குடி எஸ்.என்.ஆர் நகரை சேர்ந்த முத்துலிங்கம் (25) மற்றும் தூத்துக்குடி சக்திநகரை சேர்ந்த பத்திரகாளிமுத்து (26) ஆகியோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதேபோல, தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த சின்னதுரை (31) என்பவர் கடந்த மாதம் 11 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் மெஞ்ஞானபுரம் கைலாசபுரத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் (35) உட்பட 3 பேரை தட்டப்பாறை போலீஸார் கைது செய்தனர். இதில், சுயம்புலிங்கம் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தட்டப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், கொலை வழக்குகளில் கைதான 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொலை வழக்குகளில் கைதான முகேஷ், முத்துலிங்கம், பத்திரகாளிமுத்து, சுயம்புலிங்கம் ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 4 பேரையும் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட மொத்தம் 263 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Updated On: 14 Dec 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....