/* */

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு: கண்காணிப்பு குழு உத்தரவு!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு: கண்காணிப்பு குழு உத்தரவு!!
X

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் துவங்கும் வகையில் மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்கவும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலைய கண்காணிப்பு மேற்கொள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகக்கொண்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவினரின் கூட்டம் இன்று (05.05.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலார் ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், முனைவர்.கனகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது குறித்தும் அங்கு தேவையான பணியாளர்களை அனுமதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை பகுதிக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு ஆக்சிஜன் தயாரிப்பு நிலையை பகுதியையும் ஆக்சிஜன் தயாரிப்பு பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் தகரம் மூலம் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தல் தொர்பாகவும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதிக்கு தேவையான குடிநீர் வழங்குவது தொடர்பாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும். ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு வரும் பணியாளர்களை எந்த பாதையில் உள்ளே அனுமதிப்பது என்பது குறித்தும் ஆக்சிஜன் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பிராணவாயுவை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வந்துசெல்லும் தனியான பாதை குறித்தும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

மின்சார வசதி செய்யப்பட்ட பின்பு எத்தனை தினங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதும் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இக்குழுவின் நிபுணர்கள் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதியை இன்று மாலையே முழுமையாக ஆய்வு செய்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை மருத்துவமனைகளில் போக்கும் வண்ணம் ஆக்சிஜன் தயாரிக்க உரிய முடிவுகளை எடுக்கும். ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் துவங்கும் வகையில் மின்சார இணைப்பு வழங்கவும், குடிநீர் இணைப்பு வழங்கவும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள குழுவினர் உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது, குழு உறுப்பினர்கள் மற்றும் தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அலுவலர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 6 May 2021 12:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!