/* */

கோவில்பட்டியில் அனுமதியின்றி தனியார் சந்தை செயல்படத் தொடங்கியதால் பரபரப்பு

கோவில்பட்டியில் எந்தவித அனுமதியும் இல்லாமல் தனியார் சந்தை மீண்டும் செயல்படத் தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் அனுமதியின்றி தனியார் சந்தை செயல்படத் தொடங்கியதால் பரபரப்பு
X

கோவில்பட்டி திட்டங்குளத்தில் செயல்படத் தொடங்கிய தனியார் சந்தை.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் செயல்பட்ட தனியார் சந்தைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். உரிய அனுமதி பெற்ற பிறகு சந்தையை நடத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தனியார் சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்களில் வியாபாரிகள் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, திட்டங்குளம் ஊராட்சியில் தனியார் தினசரி சந்தை நடத்தும் விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின்போது, தனியார் சந்தை நிர்வாகிகள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. சிறப்பு அனுமதி கொடுத்து தங்களது சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் மற்றம் சந்தை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.


தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி பேசும்போது, உரிய அங்கீகாரம் பெற்றால் மட்டும் தான் தனியார் தினசரி சந்தைக்கு அனுமதி தர முடியும், தற்காலிகமாக அனுமதி தர முடியாது. மேலும் அனுமதி பெற தேவையான துறைகளில் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும், அதில் தாமதம் ஏற்பட்டால் அது குறித்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், மார்க்கெட் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சில உத்தரவுகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது. முறையாக உரிய அனுமதி பெறும் வரை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் செயல்படும் தினசரி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும்படி கோட்டாட்சியர் மகாலட்சுமி வியாபாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதே இடத்தில் மீண்டும் கடை இயங்கும் வரை தற்காலிக மொத்த மற்றும் சில்லறை கடைகள் காலவரையின்றி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் கடைகள் செயல்பட தொடங்கியது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தற்போது வரை உரிய அனுமதி பெறவில்லை எனவே கடைகளைத் திறக்க அனுமதி இல்லை என்று கூறி வியாபாரிகளிடம் நோட்டீசை வழங்கினர்.

அப்போது, சந்தை நடத்துவதற்கு ஓரிரு நாட்களில் உரிய அனுமதி கிடைத்துவிடும். அதுவரை தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் சிறிது நேரம் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். இதனையெடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், எந்தவித அனுமதியுமின்றி தனியார் சந்தை செயல்படத் தொடங்கிய விவகாரம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 9 May 2023 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!