/* */

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாறற்று கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

சீனிவாசநல்லூர் மேம்பாலம் பகுதியில் கேட்பாறற்று கிடந்த ரூ.20 ஆயிரத்து400 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாறற்று கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
X

ராமதாசுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பிலி 

திருவிடைமருதூரை அடுத்த முருக்கங்குடியை சேர்ந்த மரவியாபாரி ராமதாஸ். இவர் கடந்த 17-ம் தேதி இரவு நாச்சியார்கோவில் அருகே சீனிவாசநல்லூர் மேம்பாலம் பகுதியில் நடந்து சென்றபோது ரூ.20 ஆயிரத்து400 பணம் கத்தையாக கீழே கேட்பாறற்று கிடந்துள்ளது. இதையடுத்து அந்த பணத்தை எடுத்த அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்பிரேட்டராக உள்ள தனது நண்பர் பாஸ்கர் என்பவரிடம் பணம் சாலையில் கிடந்தது குறித்தும் அந்த பணத்தை எப்படியாவது உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாட்ஸ்ப்குழுக்களில் பதிவு செய்தார். அதன்படி கும்பகோணம் சாக்கோட்டை பகுதியை சேர்ந்த உப்பிளி என்பவர் அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அது தன்னுடைய பணம் என்றும் கடந்த 17-ம் தேதி தொலைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு அவர் வரவழைக்கப்பட்டது அவரிடம் இன்ஸ்பெக்டர் செல்வி பணம் தொலைந்தது எப்படி என விசாரித்தார். அப்போது தான் சாக்கோட்டையில் உள்ள பேக்கரியில் இருந்து பால்கோவாவை கடைகளில் விற்பனை செய்து பணத்தை வசூலித்து வருவதாகவும், அவ்வாறு கடந்த 17-ம் தேதி திருப்பனந்தாள் பகுதியில் வசூலை முடித்துக்கொண்டு வரும்போது வசூல் பணம் ரூ. 20.400 தொலைந்ததாகவும் அதனை அப்பகுதியில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தொலைந்தது அவரது பணம் என உறுதிசெய்த பிறகு அந்த பணத்தை கண்டெடுத்து கொண்டு வந்த மரவியாபாரி ராமதாஸ், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரப்பிய அவரது நண்பர் பாஸ்கர் ஆகியோர் மூலம் நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி பணத்தை பறிகொடுத்த உப்பிளியிடம் ஒப்படைத்தனர். பின்னர் நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த ராமதாஸ் மற்றும் பாஸ்கருக்கு இன்ஸ்பெக்டர் செல்வி சாலைவை அணிவித்து மலர்கொத்து வழங்கி பாராட்டினார்.





Updated On: 20 July 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு