/* */

சினிமா பாணியில் 8 கி.மீ. துரத்திச் சென்று 2 திருடர்களை மடக்கிய போலீசார்

சுமார் 8 கிலோமீட்டர் துாரம் விரட்டி சென்று, திருடர்களின் டூ விலர் மீது மோதி அவர்களை நிலைதடுமாற வைத்து பிடித்தனர்

HIGHLIGHTS

சினிமா பாணியில் 8 கி.மீ. துரத்திச் சென்று 2 திருடர்களை  மடக்கிய போலீசார்
X

தஞ்சாவூர் மாவட்டம்  பனவெளியை அருகே திருட்டில் ஈடுபட்டு தப்பிச்சென்ற   இருவரையும்  சினிமாபாணியில்  துரத்தி  மடக்கிப்பிடித்த போலீஸார்

சினிமா பாணியில் 8 கி.மீ., விரட்டி சென்று திருடர்கள் இருவரை போலீஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுபள்ளியை சேர்ந்தவர் விஜயகுமார்(24,) . இவர் தனது உறவுகாரப்பெண் ஒருவருடன் டூ விலரில், தஞ்சாவூருக்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது பனவெளியை அருகே வந்த போது, தஞ்சாவூரில் இருந்து ஹோண்டா டூ வீலரில் வந்த இருவர், விஜயகுமாரை வழிமறித்து, அவரிடம் இருந்த மொபைல் மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் விஜயகுமார் கொடுக்க மறுத்த நிலையில், 2 அடி நீளமுள்ள வாளினால், அவரை தாக்கியுள்ளனர். அதில் விஜயகுமாரின் மூக்கு, கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரிடம் ஒரு மொபைல் போன், விஜயகுமார் உறவு பெண்ணின் காதில் இருந்த ஒரு பவுன் தோடு ஆகியவற்றைப்பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

அப்போது அவ்வழியாக வந்த கிராம மக்கள், போலீஸ் அவரச எண்.100க்கு போன் செய்து, வண்டி எண்ணை தெரிவித்தனர். கட்டுபாட்டு அறையில் இருந்து தகவல் நடுகாவிரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வாகன சோதனை சாவடியில் உள்ள போலீசார் கலியராஜ், முரளி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இருவரும் டூ விலரை எடுத்து விரட்டி சென்றனர். பின்னர் அவர்கள், ஹைவே பட்ரோல் வாகன காவலர் நெடுஞ்செழியனுக்கு தகவல் அளித்ததும், அவர்களும் விரட்டி சென்றனர். சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு விரட்டி சென்று, கொள்ளையர்களின் டூ விலர் மீது மோதி அவர்களை நிலைதடுமாற வைத்தனர். கீழே விழுந்த திருடர்கள், வயல் பகுதியில் ஓடியபோது, விரட்டிச் சென்று போலீசார் அவர்களை பிடித்து நடுக்காவேரி போலீசில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கும்பகோணம் மொட்டைகோபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்(,20,) தாரசுாரத்தை சேர்ந்த பிரகாஷ்(,21) என்பதும், அவர்கள் மீது கும்பகோணம் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மொபைல், தோடு, வாள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.மூக்கில் வெட்ட காயமடைந்த விஜயகுமார், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 23 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...