/* */

கொரோனா தொற்றின்போது வேலை இழந்து நாடு திரும்பிய தமிழர்களுக்கு தொழில்தொடங்க கடனுதவி

தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் (MEGP) எண்ணும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

HIGHLIGHTS

கொரோனா தொற்றின்போது வேலை இழந்து நாடு திரும்பிய தமிழர்களுக்கு தொழில்தொடங்க கடனுதவி
X

கொரோனா பெருந்தொற்றின் போது வெளிநாட்டு வேலை இழநது தாயகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் (MEGP) எண்ணும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி புரிந்து கோயிட் 19 பெருத்தொற்றுப் பரவலின்போது வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்றுப் பயன் பெறலாம்.

இவர்கள், கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலினால் 01. 01:2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும். குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது- பொதுப் பிரிவினர் வயது 18 க்கு மேலாகவும் 45 -க்கு மிகாமலும் இருக்க வேண்டும். (பெண்கள், SC,ST, BC, MBC, Minorities, Transgender and Differently Abled - வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்).

வணிகம் மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிக பட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 இலட்சமாகவும் உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 இலட்சமாகவும் இருக்கும். பயனாளர் தம் பங்களிப்பாக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10% மற்றும் பெண்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5% செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு கடன் திட்டத் தொகையில் 25% அதிக பட்சம் ரூ.25 இலட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிக்கட்டப்படும். கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் கடன் தொகை முழுவதும் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.

எனவே வெளிநாடுகளிலிருந்து கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் வாழ்வாதாரத்துக்கான குறுந்தொழில் துவங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க www.msmeonline tn.gov.in/registration.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் www.mmmesonline.tn.gov.in/mesgp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறிந்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மையம். உழவர் சந்தை அருகில், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தினை நேரடியாகவோ. 04362- 255318.257345 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியம் தீபன் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Jun 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்