தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளத்துறைசார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுள், கால்வாய், வாய்க்கால். வடிகால் மற்றும் ஏரி ஆகியவற்றில் 189 பணிகள் நடக்கின்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளத்துறைசார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை ஆய்வு செய்தா மாவட்ட ஆட்சியர் தீபர் ஜேக்கப்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இன்று (26.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், ஆலங்குடி ஊராட்சியில், வண்ணாரப்பேட்டையில் நீர்வளத்துறை சார்பில் கல்லணை கால்வாய் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், ஆலங்குடி ஊராட்சி முதலைமுத்துவாரி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், பூதலூர் வட்டம் கல்லணையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவது குறித்தும், சுக்காம்பார் திருச்செனம்பூண்டி கோயிலடி வாய்க்கால் தூர்வாரும் திட்டப் பணிகள் குறித்தும், மாரநேரி மற்றும் விச்சலூர் படுகை ஊராட்சியில் உள்ள ஆனந்த காவேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளியில் காவிரியில் தடுப்பணை கட்டுமான பணிநடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் (2023-2024)ஆம் ஆண்டிற்கான தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. காவிரி டெல்டா ஆறுகள். கால்வாய்கள். வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 691 மாவட்டங்களில் பணிகள் 4773.13 கி.மீ நீளத்திற்குரூ.90.00 கோடிமதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறை சார்பில் நிர்வாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள். வடிகால்கள் மற்றும் ஏரிகள் உள்ள ஆகியவற்றில் 189 பணிகள். 1068.45 கி.மீ.நீளத்திற்குரூ.2045.51 இலட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 27.04.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சரால் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், ஆனந்தக் காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

மேற்காணும் தூர்வாரும் பணிகள் கீழ்காவிரி வட்டத்தைச் சார்ந்த கோட்டங்களான காவிரி வடிநிலக் கோட்டம். வடிநில தஞ்சாவூர்,காவிரி வடிநிலக் கோட்டம் (கிழக்கு) 'மயிலாடுதுறை. வெண்ணாறுவடிநிலக் கோட்டம், தஞ்சாவூர், கல்லணைக் கால்வாய் கோட்டம். தஞ்சாவூர்,அக்னியாறுவடிநிலக் கோட்டம் பட்டுக்கோட்டைமற்றும் திருச்சி. நடுக்காவிரி வடிநில வட்டத்தை சார்ந்த திருச்சி. ஆற்றுப் பாதுகாப்பு கோட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 பணிகளில் 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளபணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. ஆறுகள், கால்வாய்கள். வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் எரிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப் படுவதால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைவரை தங்கு தடையின்றி விரைவாக சென்றடையும். மேலும், மழை மற்றும் வெள்ளக் காலங்களில் வயல்வெளிகளில் தேங்கும் நீரானது விரைவில் வடிந்து பயிர்ச்சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து, பூதலூர் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுவரும் வகுப்பறை கட்டுமான பணிகள் குறித்தும் , தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணப்பதிவறை, அலுவலக வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மா.இளங்கோ, சு.மதனசுதாகர், பவழகண்ணன் ,உதவி செயற் பொறியாளர்கள், வ.சிவக்குமார், ச.மலர்விழி, சீனிவாசன் ,உதவிபொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 May 2023 2:45 PM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  ellu urundai benefits எள் உருண்டையில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்பது...
 2. சினிமா
  Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி
 3. சினிமா
  காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு?
 4. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா...
 5. சோழவந்தான்
  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பூக்குழி விழா: திரளான பக்தர்கள்...
 6. சினிமா
  Madhavan birthday celebration special today- இன்று பிறந்த நாள்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கும்...
 8. நாமக்கல்
  பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் எந்திரங்கள்: கலெக்டர்...
 9. நாமக்கல்
  மாயமான இரு மகள்களை மீட்டுத்தரும்படி பெற்றோர் போலீஸ் எஸ்பியிடம் மனு
 10. லைஃப்ஸ்டைல்
  ennai kathirikai kulambu in tamil ஆஹா...சுவையோ...சுவை... சுவை சூடான...