/* */

பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு பரிசு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

HIGHLIGHTS

பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு பரிசு
X

பேராவூரணி அருகே பெரியநாயகிபுரம் பஞ்சாயத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு சில்வர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

படுக்கோட்டை, பேராவூரணி வட்டாரங்களில், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகளவில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக 3 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழுடன், கெளவுரவிக்கப்படும் என பட்டுக்கோட்டை சப்–கலெக்டர் பாலச்சந்தர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் பொதுமக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு அளித்ததால், பொதுமக்கள் ஏராளமான நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

பேராவூரணி யூனியன் பெரியநாயகிபுரம் பஞ்சாயத்தில், மூன்று இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில், 450க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், பஞ்.,தலைவர் முத்துராமன் ஏற்பாட்டில் சில்வர் தட்டு போன்றவை பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டது.

அத்துடன் முதல் டோஸ் செலுத்திக் கொள்ள முன்வந்தவர்களின் பெயரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஊக்கத் தொகையாக முதல் பரிசு 1,500, இரண்டாம் பரிசு 1,000, மூன்றாம் பரிசு 500 என மூவருக்கு வழங்கப்பட்டது.

Updated On: 12 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்