குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..
X

குற்றாலம் பிரதான அருவி.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. தென்காசி, குற்றாலம், கடையம், ஆலங்குளம், செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் என மாவட்ட முழுவதும் மழை பெய்தது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதித்தனர்.

தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரவு முழுவதும் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால பிரதான அருவி மற்றும் பழைய குற்றாலங்களில் இன்றும் தடை தொடர்கிறது. ஐந்தருவியில் ஓரமாக சுற்றுலா குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழைஅளவு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-2-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 77 அடி

நீர் வரத்து : 239 கன அடி

வெளியேற்றம் : 100 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 185 கன அடி

வெளியேற்றம் : 185 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 62.01 அடி

நீர் வரத்து : 50 கன அடி

வெளியேற்றம் : 50 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 17 கன அடி

வெளியேற்றம்: 17 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 81.25 அடி

நீர் வரத்து : 35 கன அடி

நீர் வெளியேற்றம்: 35 கன அடி

மழை அளவு:

கடனா : 20 மி.மீ

ராமா நதி : 30.03 மி.மீ

கருப்பா நதி : 10 மி.மீ

குண்டாறு : 31.6 மி.மீ

அடவிநயினார்: 11 மி.மீ

ஆய்குடி : 19 மி.மீ

செங்கோட்டை : 33.8 மி.மீ

தென்காசி : 11 மி.மீ

சங்கரன்கோவில் : 1 மி.மீ.

Updated On: 2022-12-06T10:11:43+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...